இந்தத் திட்டத்தின்கீழ் ஏதேனும் விதிவிலக்குகள் உள்ளனவா? என்னால் ‘gov.sg’ அனுப்புநர் அடையாளம் அல்லாமல், வேறு வழிகளில் எந்த அரசாங்க அமைப்பிடமிருந்தாவது குறுஞ்செய்திகள் பெற இயலுமா?
அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தில் அங்கம் வகிப்பதால், 1 ஜூலை 2024-க்குள் அவை அனைத்தும் ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தைக் கொண்டே குறுஞ்செய்திகள் அனுப்பும். ஆனால், தேசியச் சேவை விவகாரங்கள், அவசரச் சேவைகள் ஆகியவற்றைப் பொற்த்தமட்டில், ‘gov.sg’ குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளத்தின் பயன்பாட்டுக்குக் குறிப்பிட்ட விதிவிலக்குகள் உண்டு.
குறிப்பிட்ட விதிவிலக்குகளின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
அரசாங்க அமைப்பு | குறுஞ்செய்தி வகை | பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளம் |
|---|---|---|
தற்காப்பு அமைச்சு (MINDEF) | அழைப்பாணைகள், பயிற்சி, படை த்திரட்டு அறிவிப்பு உள்ளிட்ட தேசியச் சேவை விவகாரங்களுக்காக இருவழித் தொடர்பு | 72255 |
உள்துறை அமைச்சு (MHA) | மூக்குத்திறனற்ற, பேச முடியாத அல்லது பேசுதல் குறைபாடுள்ள நபர்கள் SCDF/SPF க்கு சம்பவங்களை அறிவிக்க இருவழித் தொடர்பு | 71999 70995 |
உள்துறை அமைச்சு (MHA) | அவசரகாலத்தின்போது (எ.கா. தீ, இயற்கைப் பேரிடர் …), வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டும் பொது எச்சரிக்கை முறை | MHAalert |
உள்துறை அமைச்சு (MHA) | உள்துறை அமைச்சு (உள்துறை அமைச்சின் தேசியச் சேவை இணையவாசல் வாயிலாக) தேசியச் சேவையாளர்கள் அவர்களுடைய பயிற்சி முகாம்களுக்கான அழைப்புகளை ஏற்றுக்கொள்ள நினைவுறுத்துவதற்கும், அவர்கள் தனிநபர் உடலுறுதித் தேர்ச்சிக்கான பயிற்சிக்குச் செல்ல வேண்டியிருப்பதைத் தெரிவிப்பதற்கும் | MHA NS |
சிங்கப்பூர்க் காவல் துறை (SPF), சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) | தேசிய சேவை தொடர்பான விஷயங்களுக்கு இருவழித் தொடர்பு. | 83395761 91449746 |
சிங்கப்பூர்க் காவல் துறை (SPF), சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) | அவசரத் தொலைபேசி அழைப்பின்போது சிங்கப்பூர்க் காவல் துறையின் அல்லது சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் (SPF/SCDF) நேரடிக் காணொளி இணைப்பைப் பெறும் பொருட்டு, கைபேசி கேமராவில் அனுமதி பிறப்பிப்பதன்மூலம், அவசரக் காணொளி இணைப்பைப் பெற ஒப்புதல் அளிக்கும் நபர்கள் | POLICE 999 SCDF 995 |
சிங்கப்பூர்க் காவல் துறை (SPF) | காவல்துறையின் உதவித் தொலைபேசிச் சேவையை அழைப்போருக்கு, அவர்களுக்குத் தேவையான காவல்துறைச் சேவைகளைப் பெறுவது தொடர்பிலான குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படும். | 71000 |
விதிவிலக்குகள் அடங்கிய இந்தப் பட்டியல், இந்தப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.