எனக்கு ‘gov.sg’ குறுஞ்செய்தியில் இணைப்புகள் வருமா?
நீங்கள் ‘gov.sg’ குறுஞ்செய்திகளில் இணைப்புகளைப் பெறலாம ். ஆனால், ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைப்புகள், ஒருபோதும் பயனாளர்களின் தகவல்களைக் கேட்க மாட்டா அல்லது நீங்கள் நேரடியாக உள்பதிவு செய்யவேண்டும் என்று அறிவுறுத்த மாட்டா.
‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படும் இணைப்புகள் யாவும், “gov.sg” என்ற தொடரைத் தங்கள் இணையமுகவரியில் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு:
GoGov குறுகலாக்கப்பட்ட இணைப்புகள் (go.gov.sg குறு இணைப்புகள் ‘gov.sg’ என நிறைவுபெறும் மின்னஞ்சல் முகவரியைக் கொண்ட அரசாங்க அதிகாரிகளால் மட்டுமே உருவாக்கப்படமுடியும். ஆதலால், அது அதிகாரபூர்வ தளத்திலிருந்து வந்திருப்பது குறித்து நீங்கள் உறுதிகொள்ளலாம்)
இணையமுகவரியில் “gov.sg” கொண்டிருக்கும் அல்லது “gov.sg” கொண்டு நிறைவுபெறும் இணையத்தளங்கள் (உதாரணத்திற்கு, https://www.sms.gov.sg/)