எவ்வாறு என்னால் சட்டபூர்வ ‘gov.sg’ குறுஞ்செய்தியை அடையளம் காணமுடியும்?
சட்டபூர்வ ‘gov.sg’ குறுஞ்செய்தியை அ டையாளம் காண, உங்களுக்கு உதவக்கூடிய முக்கியமான சில குறியீடுகள் உள்ளன:
குறுஞ்செய்தியில் அனுப்புநரின் பெயர் ‘gov.sg’ எனச் சிற்றெழுத்துகளில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
குறுஞ்செய்தியானது, அதனை அனுப்பும் அரசாங்க அமைப்பு அல்லது சேவையின் முழுப்பெயருடன் தொடங்கும் (எ.கா. குடிநுழைவு, சோதனைச் சாவடிக்ள் ஆணையம், அல்லது SingPass)
குறுஞ்செய்தியானது, சீரானதொரு நிறைவுப்பகுதியைக் கொண்டு நிறைவுபெறும்: ‘This is an automated message sent by the Singapore Government.’

மேலும், எல்லா ‘gov.sg’ குறுஞ்செய்திகளும் ஒரே உரையாடலில் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றுமே ஒழிய, தனித்தனி உரையாடல்களாக இடம்பெற மாட்டா.
இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டால், அன்புகூர்ந்து இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி, அந்தக் குறுஞ்செய்தி பற்றிப் புகார் அளித்திடுங்கள்: https://go.gov.sg/report-sms