நான் வெளிநாட்டில் வசித்து வருகிறேன். நான் தொடர்ந்து gov.sg குறுஞ்செய்திகளைப் பெறுவேனா?
சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவற்றுடன் உங்கள் கைபேசி எண் பதிந்துகொள்ளப்பட்டிருந்தால், உங்களால் தொடர்ந்து குறுஞ்செய்தித் தகவல்களைப் பெறமுடியும். நீங்கள் இருக்கின்ற நாட்டைப் பொறுத்து, gov.sg அல்லது வேறொரு அனுப்புநர் அடையாளத்திலிருந்து குறுஞ்செய்தியைப் பெறலாம்.
சிங்கப்பூர் அரசாங்க அமைப்பு / சேவையுடன் பதிந்துகொள்ளப்பட்ட எண் ? | சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பதிந்துகொளப்பட்ட எண் ? | உங்கள் இருப்பிடம் | நீங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடமிருந்து குறுஞ்செய்திகளைப் பெறுவீர்களா? | நீங்கள் ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்திலிருந்து குறுஞ்செய்திகளைப் பெறுவீர்களா? |
|---|---|---|---|---|
ஆம் | ஆம் | சிங்கப்பூரில் | ஆம் | ஆம் |
ஆம் | ஆம் | சிங்கப்பூருக்கு வெளியே | ஆம் | சில சமயங்களில் பெறலாம் |
ஆம் | இல்லை | சிங்கப்பூரில் | ஆம் | சில சமயங்களில் பெறலாம் |
ஆம் | இல்லை | சிங்கப்பூருக்கு வெளியே | ஆம் | சில சமயங்களில் பெறலாம் |
*அவர்கள் இருக்கின்ற நாட்டைப் பொறுத்து, gov.sg அல்லது வேறொரு அனுப்புநர் அடையாளத்திலிருந்து குறுஞ்செய்திகள் பெறப்படலாம்.