எவ்வாறு நான் போலியான அரசாங்க அனுப்புநர் அடையாளம், குறுஞ்செய்தி ஆகியவற்றை அடையாளம் காண்பது?
நீங்கள் அனுப்புநர் அடையாளமானது ‘gov.sg’ என்பதைச் சரிபார்த்து, அது அரசாங்க அமைப்பு ஒன்றினால் அனுப்பப்பட்ட சட்டபூர்வ குறுஞ்செய்தி என்பதை உறுதிசெய்துகொள்ளலாம்.
அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெறும் அனைத்துக் குறுஞ்செய்திகளும், ஒரே அனுப்புநர் அடையாளமான ‘gov.sg’-இன் குறுஞ்செய்தி உரையாடலில் இடம்பெற்றிருக்கும். மேலும், ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்திலிருந்து அனுப்பப்பெறும் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் அது அனுப்பப்பெறும் அரசாங்க அமைப்பு அல்லது சேவையின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு அனுப்பப்படும். ஒத்த தோற்றமுடைய அனுப்புநர் அடையாளங்களிலிருந்து அனுப்பப்பெறும் குறுஞ்செய்திகள் குறித்து பெறுநர்கள் கவனமாக இருக்கவேண்டும். அத்தகைய குறுஞ்செய்திகள் தங்கள் அனுப்புநர் அடையாளங்களில் சிறிது மாற்றங்களைக் கொண்டிருக்கலாம்.